search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்கானிக் பலி"

    • இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
    • முத்துதேவன்பட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது.

    சின்னமனூர்:

    தேனி அருகே வீரபாண்டி கூழையனூரை சேர்ந்தவர் சிவா (வயது32). இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    முத்துதேவன்பட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது. இதில் காயம் அடைந்த சிவாவை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிவாவின் தந்தை சந்தானம் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதியது
    • போக்குவரத்து பாதிப்பு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கன்னங்குள மேட்டுத் தெருவை சேர்ந்த கருணாகரன் (வயது50). இவர் லாரி மெக்கானிக். இவருக்கு சொந்தமான டிராக்டரில் தண்ணீர் லோடு சப்ளை செய்து வந்தார்.

    கருணாகரன் நேற்று பெரும்புலிப்பாக்கம் பகுதியில் இருந்து டிராக்டரில் தண்ணீரில் ஏற்றுக்கொண்டு காவேரிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    ஓச்சேரி அடுத்த களத்தூர் சந்திப்பு அருகே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக கருணாகரனின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் கருணாகரன் டிராக்டர் அடியில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான,அவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் அப்பகுதி சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்கு வாகனம் மோதி மெக்கானிக் பலியானார்.
    • விபத்துகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் முகமதுஷா புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 34). இவர் மறவ மங்கலம் பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் பிரதீப் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். 4 வழிச்சாலை மெட்டல் பவுடர் கம்பெனி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பிரதீப் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விபத்து குறித்து அப்பகுதி யினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தாமதமாக வந்ததால் 20 நிமிடம் வரை உயிருக்கு போராடிய பிரதீப் பரிதாபமாக இறந்தார். விபத்துகுறித்து திருமங்க லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு
    • கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வேனை தேடி வருகின்றனர்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த பெரியகுக் குண்டி பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் தினகரன் (வயது 20). அதேப்பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவு தினகரன் பைக்கில் சின்னகுக்குண்டி பகுதியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்தார். ஆற்காடு அடுத்த புதுப்பாடி அருகே சென்ற போது ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வேன் தினகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தினகரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    • ஆற்றில் சித்திக் விழுந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாஜுதீன் (74). இவரது மனைவி ஆகி சர்ஜாத். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதில் இளைய மகன் சித்திக் அலி (35). இவர் அதே பகுதியில் இருசக்கர மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு வருடமாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அனுப்பர்பாளையம் பரிசல் துறையில் உள்ள ஆற்றில் சித்திக் விழுந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சித்திக் அலியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சித்திக் அலி இறந்து விட்டதாக தெரிவித்தனர். சித்திக் அலி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதியது.
    • கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் எம்.பழனிச்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42) . கார் மெக்கானிக் . செந்தில்குமார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதியது. இதில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த விபத்து குறித்து பஸ்சை ஓட்டி வந்த தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் வசந்தராஜா (37) என்பவர் மீது வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தைகள் இல்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தினகரன் ( வயது 32 ) . சென்னையில் உள்ள தனியார் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் மெக் கானிக்காக வேலை செய்து வந்தார் . இவருக்கு ஆரணி அடுத்த அக்ராப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சரோஜினி என்ற பெண்ணுடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தினகரன் மது போதைக்கு அடிமையாகிய தாக கூறப்படுகிறது, கடந்தசிலநாட்களுக்கு முன்பு மனைவி சரோஜினி அவரது தாய் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

    இந்த நிலையில் தினகரனும் தனது தாய் வீடான துந்தரீகம்பட்டு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார். அப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது.

    நேற்று காலை நீண்டநேரமாகியும் அவர் எழுந்திருக்காமல் மயக்கநிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தினகரன் ஏற்க னவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தாய் வசந்தா ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×